×

தியாகதுருகம் பகுதியில் திருட்டுத்தனமாக குடிநீர் எடுக்க பயன்படுத்திய 22 மின்மோட்டார்கள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி, ஜன. 31: முறைகேடான குடிநீர் இணைப்பை துண்டித்தல் மற்றும் குடிநீர் இணைப்பில் மின் மோட்டாரை நேரடியாக பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்து வருபவர்களின் மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய கடலூர் பேரூராட்சிகளின் மண்டல இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டார். இதையடுத்து தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி தலைமையில் பேரூராட்சிகளின் குடிநீர் திட்ட பணியாளர்கள் வடக்கநந்தல் ராமச்சந்திரன், லட்சுமணன், திருக்கோவிலூர் ரமேஷ், ராமு, மணலூர்பேட்டை கோபு ஆகியோர் தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான கிருஷ்ணா நகர், வைஸ்யா நகர், பழைய தபால் நிலையம் தெரு, பாப்பான் குளம் தெரு, கஸ்தூரிபாய் நகர் உள்ளிட்ட பகுதியில் திருட்டுத்தனமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 22 வீடுகளில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சியெடுப்பதை கண்டறிந்து 22 மின்மோட்டார்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்று தவறான முறையில் யாரேனும் தண்ணீர் எடுப்பது தெரியவந்தால் வீடுகளில் மின்மோட்டார் பறிமுதல் செய்வதோடு குடிநீர் இணைப்புகள் முழுமையாக துண்டிக்கப்படும் என பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

Tags : area ,Thyayathurugam ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது